க்ரைம்

புதுச்சேரி | வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் - வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் கைது

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் 2-வது குறுக்குத் தெருவில், பெண்கள் தங்கியுள்ள ஒரு வீட்டுக்கு அவ்வப்போது வெளிநபர்கள் சிலர் வந்து செல்வதாக, வடக்கு எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை, மகளிர் போலீஸாருடன் சென்று சோதனையிட்டனர். அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கிருந்த 4 பெண்களை மீட்ட போலீஸார், பெண் புரோக்கரையும் பிடித்தனர்.மேலும் அங்கிருந்த 2 செல்போன்கள், ரூ.890 ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அனைவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் புரோக்கர் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த ரம்யா(38) என்பதும், மீட்கப் பட்ட பெண்கள், கள்ளக்குறிச்சி, கடலூர் துறைமுகம், மரக்காணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 4 பெண்களையும் காப்பகத்தில் போலீஸார் ஒப்ப டைத்தனர். புரோக்கரான ரம்யா, வீட்டினை வாடகைக்கு கொடுத்த அதன் உரிமையாளரான லட்சுமி நாராயணன் (69) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT