க்ரைம்

சென்னையில் 3 வெவ்வேறு இடங்களில் போதை மாத்திரைகளை விற்றதாக 8 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திரு.வி.க.நகர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்றுமுன்தினம் காலை, திரு.வி.க.நகர், பல்லவன் சாலையில் உள்ள மைதானம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக திரு.வி.க. நகரைச் சேர்ந்த சரவணன் (39) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல ஆர்.கே.நகர், மீனாம்பாள் மேம்பாலம் அருகே ஆர்.கே.நகர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 5 பேர்போலீஸாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 பேரைபோலீஸார் விரட்டிப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஐ.டி.பணியாளர்களைக் குறிவைத்து போதை மாத்திரை மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

அதன்பேரில், பிடிபட்ட கொருக்குப்பேட்டை வினோத்குமார் (20),பிரகாஷ் (18), அலெக்ஸ்(19) ஆகிய3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், தலைமறைவான இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதேபோல் ராஜமங்கலம் பகுதியில் போதைப் பொருள் விற்றதாக கொளத்தூரைச் சேர்ந்த லோகேஷ் (19), கண்ணன் (20), சார்லஸ் (19), வில்லிவாக்கம் மணிகண்டன் (23) ஆகிய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT