மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஏர்-கன் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ் சேரியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிர்மல் பிரபு (26). இவர், இரு நாட்களுக்கு முன்பு மதுரை வந்தார். அதன்பின் சென்னை செல்வதற்காக நேற்று காலை மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவரது உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு படையினர் சோதனையிட்டபோது, அதில் ஏர்-கன் எனும் பொம்மை துப்பாக்கி இருந்தது.
மத்திய தொழில் பாதுகா்பு படை வீரர்களை அவரை அவனியாபுரம் போலீஸில் ஒப்படைத்தனர். பயண அவசரத்தில் ஏர்-கன் துப்பாக்கியை எடுத்து வந்து விட்டதாக அவர் தெரிவித்தார். பின்னர் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என எச்சரித்து அவரை போலீஸார் விடுவித்தனர்.