ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (37), கஞ்சா வியாபாரி. இவர், மனைவி துர்கா (28). இந்நிலையில், அதே பகுதியில் ஆதரவற்ற நிலையில் தாயும், மகளும் வசித்து வருகின்றனர். சிறுமி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்நிலையில், பாஸ்கருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வீட்டின் அருகே வசித்து வரும் தாயும், மகளையும் நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்தார். மது போதையில் இருந்த பாஸ்கர் தனது மனைவியை துர்காவை அழைத்துக்கொண்டு கடந்த 28-ம் தேதி சிறுமியின் வீட்டுக்குச் சென்றார்.
அந்த வீட்டின் வெளியில் மனைவியை நிற்க வைத்து விட்டு, அத்துமீறி சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டில் இருந்த தாயும், மகளையும் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களை ஆபா சமாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். தொடர்ந்து, சிறுமியையும் அதன்பிறகு அவரது தாயையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளி யில் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்நிலையில், கண்ணமங்கலம் கூட்டுரோட்டில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவியை காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரையும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.