க்ரைம்

அவிநாசி | வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் காவலர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: அவிநாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன்புதூரில் வசிப்பவர் அருள்குமார் (33). அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சந்தியா (27) என்பவருக்கும், அருள்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன் தினம் இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்ததில் சந்தியா விஷம் அருந்தி மயக்கமடைந்தார். அப்போது சாதிப் பெயரை சொல்லி அருள்குமார் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அணைப்புதூர் தனியார் மருத்துவமனையில் சந்தியா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சந்தியாவின் தாயார் மருதாள் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் உத்தரவின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அருள்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT