கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பசுங்காயமங்கலத் தில், ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான ராஜமாணிக்கம் என்பவர் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவிகளிடம் ராஜமாணிக்கம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த பெற்றோர் நேற்று பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீஸார் ராஜமணிக்கத்தை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.