தாம்பரம்: தாம்பரம் அடுத்து குன்றத்தூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் தங்கள் 14 வயது மகளை அவரது தாத்தா வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது வழக்கம். சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் கூறப்படுகிறது.
இந்நிலையில் தாத்தா வீட்டின் எதிர்வீட்டில் உள்ள சுகுமாரன் (62) என்ற முதியவர் அடிக்கடி சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
பின்னர் வழக்கு தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் பாலியல் வன்கொடுமைக்காக முதியவர் சுகுமாரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.