பழநி: கடன் தொல்லை காரணமாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த தம்பதி பழநியில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பல்லுருத்தியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமன்ரகு (45). இவரது மனைவி உஷா (43). இவர்கள் பழநி அடிவாரத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் (நவ.21) சுவாமி தரிசனம் செய்ய வந்ததாக அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை வரை இருவரும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்றிரவு (நவ.22) போலீஸார் முன்னிலையில் அறை திறக்ககப்பட்டது. அப்போது கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக மலையாளத்தில் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி பழநி அடிவாரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.