க்ரைம்

பர்கூர் | மாணவர் உயிரிழந்த வழக்கில் அரசுப் பள்ளி மாணவர் கைது

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த வழக்கில், சகமாணவரை போலீஸார் கைது செய்தனர்.

பர்கூர் அருகே சக்கிலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழி லாளி வெங்கடேசன்-சசிகலா தம்பதியின் மகன் கோபிநாத் (17). இவர் பர்கூர் தாலுகா சிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கப்பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும், இவருடன் படிக்கும் மாணவருக்கும் இடையில் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.

இதில், சகமாணவர் தள்ளிவிட்டதில், கீழே விழுந்த கோபிநாத்துக்கு வலிப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக பர்கூர் போலீஸார் விசாரணை நடத்தி, கொலை குற்ற நோக்கத்தோடு இல்லாமல் மரணம் விளைவித்தல் (304) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து 17 வயதுடைய சக மாணவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT