க்ரைம்

மதுரை | ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் குண்டு வீசிய வழக்கில் தேடப்பட்ட 4வது நபர் 50 நாட்களுக்கு பிறகு கைது

என். சன்னாசி

மதுரை: மதுரையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 50 நாளுக்கு பிறகு மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி கிருஷ்ணன் என்பவரின் கார் செட்டிற்கு காரில் வந்த கும்பல் ஒன்று செப்.,23-ல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியது. இதுதொடர்பாக கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். அப்பகுதியிலுள்ள சிசிவிடி பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்தபோது, இச்சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மதுரை சம்பட்டிபுரம் உசேன் (33) நெல்பேட்டை சம்சுதீன் (39)அடுத்தடுத்து கைது செய்யப் பட்டனர். அதேபோல், மதுரை மாப்பாளையத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் கிளினிக் நடத்திய அபுதாகிர் என்பவரும் ஓரிரு நாளில் கைது செய்யப்பட்டார். தற்போது, இவ்வழக்கில் தொடர்புடைய 4வது நபரான மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஆரீப் (35) என்பவரை காவல் ஆய்வாளர் பெத்ராஜ் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து தேடினர்.
சுமார் 50 நாட்களுக்கு பிறகு அவர் நெல்பேட்டை பகுதியில் வைத்து கைது செய்யப் பட்டார். இதையொட்டி, அப்பகுதியில் ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

SCROLL FOR NEXT