க்ரைம்

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்: இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது

செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பிரதாப் ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூருவில் போலி ஆவணங்கள் மூலமாக வெளிநாட்டினர் பாஸ்போர்ட் தயாரிப்பு மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணை அடிப்படையில், பாஸ்போர்ட் ஏஜென்ட் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தோம். பின்னர் இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக பெங்களூருவுக்கு வந்து போலியாக கல்விச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளனர். இதற்கு இங்குள்ள ஒரு கும்பல் பாஸ்போர்ட்டுக்கு ரூ.45 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் இந்தக் கும்பல் 50-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT