க்ரைம்

விழுப்புரம் | மாணவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது

செய்திப்பிரிவு

விழுப்புரம்: செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவலுார்பேட்டையை சேர்ந்த ஞானசேகர் (27) என்ற இளைஞர், இந்த மாணவியிடம் பழகி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த ஞானசேகர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோவாக எடுத்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார். வீட்டுக்கு வந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியின் தந்தை, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ஞானசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

SCROLL FOR NEXT