க்ரைம்

சென்னை | ஆட்டோ ஓட்டுநர் கொலையில் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை புதுப்பேட்டையில் வசித்து வருபவர் பாஷா என்ற சையது முகமது பாஷா (26). இவருக்கு் மனைவி அமுதா, 2 குழந்தைகள் உள்ளனர். பாஷா அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்ததால், அமுதா அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் தேனாம்பேட்டையை சேர்ந்த சக்கரை முகம்மது (32) என்பவரை 2-வதுதிருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்குப் பிறந்த 2 குழந்தைகளையும் பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் உள்ள தனது சித்தியிடம் அமுதா ஒப்படைத்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு ஓடைக்குப்பத்துக்கு தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக அமுதா சென்றதால் சக்கரை முகமது அமுதாவை அடித்தார்.

இதனால் கோபமடைந்த முதல் கணவர் பாஷா கற்களால் சக்கரை முகமதுவை கற்களால் தாக்கினார். இதில் காயமடைந்த சக்கரை முகமது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாஷாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT