வேடசந்தூர்: வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டி தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் ராஜேஷ்குமார் (32). அவரது மனைவி கீர்த்திகா (23). இருவருக்கும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ், அவரது மனைவி கவுரி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஆலையில் பணிபுரிந்தபோது பழக்கம் ஏற்பட்டு குடும்ப நண்பர்கள் ஆனார்கள். பிரகாஷ், கவுரி தம்பதிக்கு 4 வயது மகள் இருந்தார்.
இந்நிலையில் ராஜேஷ்குமார், கீர்த்திகா ஆகியோர் அச்சிறுமியை தாங்கள் வளர்ப்பதாகக் கூறி, தீபாவளிக்கு முன்பு, தங்கள் சொந்த ஊரான வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டி கிராமத்துக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமி உடல்நலம் குன்றி உயிரிழந்தார். டிஎஸ்பி துர்காதேவி தலைமையில் விசாரணை நடத்திய போலீஸார் ராஜேஷ்குமார் - கீர்த்திகா தம்பதியை கைது செய்தனர்.