ஸ்ரீவில்லிபுத்தூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 2 இளைஞர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி( 21). பெயின்ட் அடிக்கும் வேலை செய்கிறார். இவரது நண்பர் திருக்குமரன்(20). பொறியியல் பட்டதாரி. இருவரும் கடந்த 2015-ம் ஆண்டில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ வழக்கில் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பால்பாண்டி, திருக்குமரன் ஆகிய இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.