சென்னை: வில்லிவாக்கம் மண்ணடி ஒத்தவாடை தெருவைச்சேர்ந்தவர் தீபன்ராஜ் (37). இவர் தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நேற்று முன்தினம் மாலை பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அந்த வழியாக 95-வது வார்டு திமுக வட்ட செயலாளர் அகிலன் என்பவரின் கார் ஓட்டுநரானபாலாஜி(35) காரில் வந்துள்ளார். அப்போது தீபன்ராஜிடம் தெருவில் ஏன்பட்டாசு வெடிக்கிறீர்கள் என கேட்டு பாலாஜி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது இதனால்,இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த பாலாஜி, திமுக வட்ட செயலாளர்அகிலன் உள்ளிட்டோரை செல்போனில் அழைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த அகிலன் உள்ளிட்டோர், தீபன்ராஜை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார்வழக்கு பதிவு செய்து வில்லிவாக்கத்தை சேர்ந்தகடம்பன்(41), பாலன் (38), நவீன்குமார்(27), ரஞ்சித்குமார் (37) மற்றும் 17 வயது சிறுவனைநேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திமுக வட்ட செயலாளர் அகிலன், பாலாஜி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.