க்ரைம்

சென்னை போலீஸார் நடத்திய சோதனையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 516 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு சோதனை மற்றும் வாகன தணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் கொலை முயற்சி மற்றும் 2-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளவர்களை கண்காணித்து குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க போலீஸார் அறிவுறுத்தினர்.

மேலும், 12 பேரிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில், இதுவரை சென்னையில் 516 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2,429 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளிடம் இருந்து நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறப்பு வாகன தணிக்கையில் முறையான ஆவணங்கள் இல்லாத 51 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT