புதுச்சேரி முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகரில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலை மையிலான போலீஸார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்குபாலியல் தொழில் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்துஅங்கிருந்த ரெட்டியார்பாளை யத்தைச் சேர்ந்த புரோக்கர் அந் தோனி (39) என்பவரை போலீஸார் பிடித்தனர். மேலும் அங்கிருந்த 4 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில், பிடிபட்ட அந்தோனி வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரது வீட்டை வாடகைக்கு எடுத்து வார இறுதி நாட்களில் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
மேலும், பெண் களின் போட்டோக்களை வாடிக் கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைத்து, அதில் வாடிக்கையாளர் தேர்வு செய்யும் பெண்ணை வெளி இடங்களுக்கும் அனுப்பி வைத்து பாலியல் தொழிலை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்தோனியை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு பைக்கை பறிமுதல்செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப் பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.