க்ரைம்

ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் திருட்டு

செய்திப்பிரிவு

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டின் மாடியில் ஓ.பன்னீர்செல்வம் ஓய்வு எடுப்பதற்காக தனி அறை ஒன்று உள்ளது.

நேற்று முன்தினம் இரவு பண்ணை வீட்டின் பின்புறம் உள்ள சுவரில் ஏறி குதித்த மர்ம நபர்கள், ஓபிஎஸ் அறை கதவின் பூட்டை உடைத்து எல்இடி டிவியை திருடிச் சென்றனர்.

பாதுகாவலர்கள் நேற்று காலை வந்தபோது மாடி அறை கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தனர். தென்கரை போலீஸார் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை சேகரித்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT