க்ரைம்

வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் 2 போலீஸ் எஸ்.ஐ.களுக்கு பிடிவாரன்ட்: மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கத்தை அடுத்த காட்டுக்கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் தசரதன். வழக்கறிஞர். கடந்த 2021-ம் ஆண்டு அக். 21-ம் தேதி வழக்கறிஞரின் வீட்டுக்குள் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புஷ்பாகரன், பார்த்திபன், காவலர் கார்த்தி, ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் கார்த்தி மற்றும் எழுத்தர் ரவிவர்மன் ஆகியோர் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞர், அவரது தாயாரை தாக்கியதாகவும், சட்டவிரோதமாக காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தசரதன் புகார் அளித்தும்நடவடிக்கை ஏதும் எடுக்காததால் மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஆனால், உதவி ஆய்வாளர்கள் நந்தகுமார், புஷ்பாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இருவர் மீதும் பிடி வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT