க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து சென்னை நேற்று வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, முகமது ஃபாஸ்லீன் ஃபலீல் என்பவர் மீது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டதில், ரூ.65.30 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 486 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, துபாயில் இருந்து வந்தவரிடம் இருந்து ரூ.30.31 லட்சம் மதிப்பிலான, 690 கிராம் தங்கம், அபு தாபியில் இருந்து வந்தவரிடம் இருந்து ரூ.30.09 லட்சம் மதிப்பிலான தங்கம், குவைத்தில் இருந்து வந்தவரிடம் இருந்து ரூ.11.20 லட்சம் மதிப்பிலான 255 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.71.62 லட்சம் மதிப்பிலான, 1 கிலோ 630 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT