க்ரைம்

காவலர் மீது தாக்குதல்: மாணவர் உட்பட 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர்பாலாஜி (28). இவர் அண்ணாசாலை தாயார்சாகிப் தெருவில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்கள் காவலர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் பாலாஜிக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அவர்கள் பிளேடால், பாலாஜியின் கழுத்து மற்றும் கையில் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர். ரத்தம் கொட்டியபடி இருந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவல் அறிந்து வந்த அண்ணாசாலை போலீஸார், காவலர் பாலாஜியை பிளேடால் அறுத்த கல்லூரி மாணவர் சையது பயாஸ் (21), சையது சாலாஜாத்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய சையது ரபீக்(21) என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT