திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜா முத்தெழில்.
இவர் அண்மைக் காலமாக தனது வகுப்பில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், ராஜா முத்தெழில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜா முத்தெழிலை கைது செய்தனர்.