க்ரைம்

தேனி | பரோலில் சென்றபோது தப்பித்த ஆயுள் தண்டனை கைதி 25 ஆண்டுகளுக்கு பிறகு கைது

செய்திப்பிரிவு

25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை கடமலைக்குண்டு போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே முத்தாலம்பாறையில் 1982-ல் நடந்த கொலையில் சின்னவெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், 28.8.1985-ல் சின்னவெள்ளைக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

அவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி 1997-ம் ஆண்டு பிப்ரவரியில் 5 நாட்கள் அவசர கால விடுப்பில் பரோலில் வெளியே சென்றார்.

ஆனால், அதன் பின்பு சிறைக்குச் செல்லாமல் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னவெள்ளையை கடமலைக்குண்டு போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின், அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT