க்ரைம்

கட்டிடத்தை காலிமனையாக பதிந்ததால் அரசுக்கு இழப்பு; 2 சார் பதிவாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை: போலி ஆவணத்தால் பத்திரம் பதிந்த தென்காசி சார் பதிவாளர் கைது

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் கட்டிடங்களைக் காலிமனை என பதிவுசெய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 2 சார் பதிவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதேபோல் போலி ஆவணம்மூலம் பத்திரம் பதிந்த தென்காசிசார் பதிவாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை சொக்கிகுளம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கடந்த 2018-2019 காலகட்டத்தில் சார் பதிவாளர்களாகப் பணிபுரிந்த ஜவகர், அஞ்சனக்குமார் ஆகியோர் கட்டிடங்களை காலிமனையிடம் என பதிவு செய்து அரசுக்கு ரூ. 5லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியது ஆய்வில் தெரிந்தது. இதுதொடர்பாக பத்திரப்பதிவுத் துறை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து2 சார் பதிவாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புகாரின்பேரில் மதுரையில் உள்ள ஜவகர் வீட்டில் நேற்றுலஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் சோதனை நடந்தது. அப்போது கணக்கில் வராத ரூ.5 லட்சம் மற்றும் சிலஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதேபோல, புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ். நகரில் உள்ள அஞ்சனக்குமார் வீட்டிலும் லஞ்சஒழிப்பு போலீஸார் சோதனைநடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

தென்காசி சார் பதிவாளர்: தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மதுரையைச் சேர்ந்தமறைந்த தொழிலதிபர் கருமுத்து தியாகராஜனுக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலம் உள்ளது. திருச்சியைச் சேர்ந்த லலிதா என்பவர், கருமுத்து தியாகராஜனின் குடும்பவாரிசு என்று போலி ஆவணங்கள்தாக்கல் செய்து, ஊத்துமலையைச் சேர்ந்த சோமசுந்தரபாரதி, தென்காசியைச் சேர்ந்த முகமது ரபீக்,சுரண்டையைச் சேர்ந்த பவுன்ராஜ் ஆகியோருக்கு இடத்தை விற்பனை செய்துள்ளார். இதற்கான பத்திரப்பதிவு தென்காசி சார் பதிவாளர் அலுவலகம் எண் 1-ல் நடந்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம்நிலம் விற்பனை செய்யப்பட்டதைஅறிந்த கருமுத்து தியாகராஜன்அலுவலக மேலாளர் சபாபதி, இதுகுறித்து தென்காசி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் சார் பதிவாளர் மணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT