க்ரைம்

மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்த டிடிஎப் வாசன்

செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ‘டிடிஎப்’ வாசன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை தனது யூ டியூப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் யூ டியூபர் ஜி.பி.முத்து என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதையடுத்து, அவர் மீது போத்தனூர், சூலூர் காவல் நிலையங்களில் தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், அவர் மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு நேற்று சரணடைந்தார்.

இதனையடுத்து, இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்த பின் ஜாமீனில் வாசன் விடுவிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT