திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் படித்துவரும் பள்ளி மாணவிகள் 4 பேர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், பழநி அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்தனர்.
இதில் பழநி சத்யா நகரைச் சேர்ந்த ராகுல் (25), பரமானந்தம் (24), கிருபாகரன் (23), 18 வயது கல்லூரி மாணவர் ஆகியோர் விடுதியில் தங்கியிருந்த 4 பள்ளி மாணவிகளைப் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் ‘போக்ஸோ’ சட்டத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், விடுதிக் காப்பாளர் அமுதா (45), காவலாளி விஜயா (50) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகம் உத்தரவிட்டார்.