க்ரைம்

மதுராந்தகம் | மருத்துவர் இல்லாத நிலையில் பிரசவம் பார்த்த செவிலியர்களால் குழந்தை இறந்ததாக மறியல்

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இவர், இரண்டாவதாக கருத்தரித்து இருந்தார்.

பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, சூனாம்பேடு அடுத்த இல்லிடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாகவும் இதில் ஏதோ சிக்கல் ஏற்பட ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு புஷ்பாவை அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

மதுராந்தகம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த சூணாம்பேடு போலீஸார் அனைவரையும் கலைந்துபோகச் செய்தனர். இந்த விகாரத்தில் தொடர்புடைய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT