செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கேளம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக இளைஞர் அணி செயலாளர் சுமன் என்பவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.500 ஒரு நபர் திருடியுள்ளார்.
அவரை கையும்களவுமாக பிடித்து போலீஸாரிடம் அதிமுகவினர் ஒப்படைத்தனர். அந்த நபர் பிரபல பிக்பாக்கெட் கொள்ளையரான திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பது தெரியவந்தது.
இவர் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என மக்கள் அதிகம் கூடும் பகுதியில் தொடர்ச்சியாக இதுபோன்று பிட்பாக்கெட் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.