சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் மதன்குமார், சாயிதா பானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்ற கஸ்தூரி, மாரி, பாஷா, முத்துபாண்டி, மீனா,காமேஸ்வர ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், மாரீஸ்வரன், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் என்ற அஜய், கண்ணன், பாஜகபிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி ஆகிய 26 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், மாரி, பாஷா, முத்துபாண்டி, மீனாஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மாரீஸ்வரன் வழக்கு விசாரணை காலத்தில் உயிரிழந்துவிட்டார். மற்ற 21 பேர் குற்றவாளிகள் என்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.