க்ரைம்

தூத்துக்குடி | மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ராஜீவ்நகர் வடக்கு 2-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (56). இவர் தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர், பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆய்வாளர் வனிதா போக்ஸோசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை நேற்று கைது செய்தார்.

SCROLL FOR NEXT