க்ரைம்

ஆவடி | கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 9 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட செங்குன்றம், வெள்ளவேடு, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச் சம்பவங்களை ஒழிக்கவும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர், கண்காணிக்கப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சமீபத்தில் எஸ்ஆர்எம்சி காவல்நிலைய எல்லையில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த சூரியபிரகாஷ் என்கிற சூரியா, கருப்பையா என்கிற குட்டி, அயப்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 3 பேர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அதே போல், சமீபத்தில் பூந்தமல்லி காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் கைதான வெள்ளவேடு, கடம்பத்தூர், விடையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எபினேசர் என்கிற ராஜன், சுனல் என்கிற கோடீஸ்வரன், சூர்யா, ஆனந்த் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும்திருட்டு மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக கைதான பூந்தமல்லியைச் சேர்ந்த முபாரக் அலி, சென்னை - எண்ணூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்கிற சுருட்டை வெங்கடேஷ் ஆகிய இருவர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT