பூந்தமல்லி: திருவேற்காடு - காமதேனு நகரைச் சேர்ந்தவர் டில்லி (63). இவரது மகன் பிரகாஷ். வாகன ஓட்டுநர். குடும்பத்துடன் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மதுப்பழக்கம் காரணமாக வீட்டில் தந்தை, மனைவியுடன் அன்றாடம் தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தந்தை டில்லியுடன் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றி அவரை தாக்கியதில் படுகாயமடைந்த டில்லி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த திருவேற்காடு போலீஸார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.