க்ரைம்

பொள்ளாச்சி | கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அருகே பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோட்டூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், பொள்ளாச்சியிலுள்ள அரசு கல்லூரியில் 2-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கோட்டூரில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில் சென்றுள்ளார்.

கோட்டூர் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன் (37). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

பேருந்தில் மாணவியின் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரங்கநாதன், பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, ரங்கநாதனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT