விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பியதாக இந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.
விநாயகர் சிலைகளை கரைக்க எடுத்துச் செல்லும்போது, மாற்றுமதத்தினர் குறித்தும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசக்கூடாது என போலீஸார் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வைசியாள் வீதி - சலீவன் வீதியில் நேற்று முன்தினம் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது, அதில் பங்கேற்ற ஒருவர், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கோஷமிட்டதை வீடியோ பதிவு செய்த கடைவீதி போலீஸார் அந்நபரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர், செல்வபுரம் ராமமூர்த்தி சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ்(24) என்பதும், இந்து முன்னணி அமைப்பின் செல்வபுரம் பகுதி செயலாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷை போலீஸார் நேற்று கைது செய்தனர்.