சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.83 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
டாக்காவிலில் இருந்து நேற்று சென்னை வந்த விமானத்தை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அந்த விமானத்தின் கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.45.15 லட்சம் மதிப்புள்ள 995 கிராம் தங்கக்கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கடந்த 25-ம் தேதி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.29.92 லட்சம் மதிப்புள்ள 642 கிராம் தங்கமும், 24-ம் தேதி ரூ.78.46 லட்சம் மதிப்புள்ள 1.736 கிலோ கிராம் தங்கமும், 23-ம் தேதி சோதனையில் ரூ.55.59 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ கிராம் தங்கமும், 22-ம் தேதி சோதனையில் ரூ.73.79 லட்சம் மதிப்புள்ள 1.622 கிலோ கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
6.2 கிலோ தங்கம்
சென்னை விமான நிலையத்தில் கடந்த 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மொத்தம் ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.