க்ரைம்

தி.மலையில் பாலியல் வன்கொடுமையால் யுகேஜி சிறுமி உடல்நிலை பாதிப்பு: பள்ளி தாளாளர், அவரது கணவர் கைது

செய்திப்பிரிவு

சேத்துப்பட்டு அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் காமராஜ் மற்றும் அவரது மனைவியும் பள்ளி தாளாளருமான பிரபாவதி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் யுகேஜி வகுப்பு படிக்கும் 4 வயது சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், சேத்துப்பட்டு மற்றும் போளூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆனாலும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அவரது பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரின் பரிசோத னையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட் டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, திருவண்ணா மலை மாவட்ட சைல்டு லைன் பிரிவுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற் கிடையில், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர்.

இதில், பள்ளிக்கு சென்ற சிறுமியை, சாக்லெட் கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொ டுமைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் புகைப் படங்களை காண்பித்து, சிறுமியிடம் அடையாளம் காணும் நட வடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பது தெரியவந்தது.

இவர், சேத்துப்பட்டு அருகே உள்ள உலகம்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த தகவல் வெளியானதும், பள்ளி முன்பு பொதுமக்கள் நேற்று திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், பள்ளி வளாகம் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், திருச்செந்தூர் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த காமராஜை, தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கொடுத்த தகவலின் பேரில், எட்டயபுரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை, போளூருக்கு அழைத்து வரு வதற்காக, தி.மலை மாவட்ட தனிப்படையினர், எட்டயபுரம் விரைந்துள்ளனர்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர், பள்ளிக்கு சென்று நேற்று விசாரணை நடத்தினர். ஆசிரி யர்கள், பெற்றோர், ஊழியர்கள் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறும்போது, “போக்சோ உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசுப் பள்ளி ஆசிரியர் காமராஜ் மற்றும் அவரது மனைவியும் பள்ளி தாளாளருமான பிரபாவதி ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஆசிரியர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT