க்ரைம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விளாத்திகுளம் மருத்துவர் கைது

செய்திப்பிரிவு

விளாத்திகுளத்தில் இருந்து வேம்பார் செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை நடத்தி வருபவர் ராபின்சன்(43). இவரது மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாத மூன்று வயது மகனை அழைத்துக் கொண்டு நேற்றுமுன்தினம் இரவு பெண் ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பது போல், அந்த பெண்ணுக்கு ராபின்சன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அப்பெண் கண்டித்தபோது ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் அரிகிருஷ்ணன் விசாரணை நடத்தி ராபின்சனை கைது செய்தார்.

கைதான ராபின்சன் ஏற்கெனவே 2015-ம் ஆண்டில் ஒரு பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT