சுரேஷ். 
க்ரைம்

வேலூரில் முதியவரை ஏமாற்றி ஏடிஎம்-ல் பணம் திருடியவர் கைது

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் தெற்கு குற்றப்பிரிவு காவல் ஆய் வாளர் ஷியாமளா தலை மையிலான காவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவல் துறையினரைப் பார்த் ததும் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றார். அவரை விரட்டிச் சென்று பிடித்தனர்.

விசாரணையில், அவர் காட்பாடி அருகேயுள்ள பில் லாந்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (36) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 15-க்கும் மேற்பட்ட வங்கிகளின் காலாவதியான 144 ஏடிஎம் கார்டுகள் இருந்தன.

தொடர் விசாரணையில் வேலூர், வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட் டங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க திணறும் முதியவர்கள், படிக்காத நபர்களை குறி வைத்து நூதன முறையில்பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாமல் திணறும் நபர்களுக்கு உதவுவது போல் நடித்து ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என பணம் திருடி வந்துள்ளார்.

வேலூரில் முதியவர் ஒருவரிடம் ஏடிஎம் மையத்தில் உதவுவது போல் நடித்து ரூ.40 ஆயிரம் பணம் திருடிய தகவலை கூறியுள்ளார். இந்த நூதன திருட்டுக்காக ஏடிஎம் மையங்களில் யாராவது தவற விட்டுச் செல்லும் கார்டுகள், குப்பையில் வீசப்படும் காலா வதியான ஏடிஎம் கார்டுகளை எல்லாம் சேகரித்து வைத்து இதுபோன்ற நூதன திருட்டில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் 144 காலாவதியான ஏடிஎம் கார்டுகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம், ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT