திருநெல்வேலி: திருநெல்வேலியில் 13 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்தவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி விஷ்ணுபிரியா நகரைச் சேர்ந்த ராஜசேகர் மகன்சண்முகவேல்ராஜ் (41). இவர்கடந்த 2013-ம் ஆண்டு திருநெல்வேலியில் தங்கியிருந்தார்.
அப்போது 13 வயது சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநெல்வேலி டவுன் மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில், நேற்று, சண்முகவேல் ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அன்புச்செல்வி தீர்ப்பளித்தார்.