க்ரைம்

கோவில்பட்டி விபத்தில் மாணவர் உயிரிழப்பு - தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

கோவில்பட்டி லட்சுமி மில் மேலக்காலனியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (15). கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்,கடந்த 15-ம் தேதி தனது உறவினரின்மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, புறவழிச்சாலையில் சென்றார்.

கூடுதல் பேருந்து நிலையம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் ஸ்ரீபுஷ்பராஜ் உயிரிழந்தார்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவிகேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில், மாணவர் ஸ்ரீபுஷ்பராஜ் இடப்புறமாக விழுகிறார். அப்போது அந்த வழியாக வந்த அவர் படித்த தனியார் பள்ளி பேருந்து மாணவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது.

தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ்(62) என்பவரை போலீஸார் கைது செய்தனர். பள்ளி மாணவர் மீது அவர் படித்த பள்ளியின் பேருந்தே மோதிவிட்டு நிற்காமல் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் கூறும்போது, “விபத்தில் மாணவர் ஸ்ரீபுஷ்பராஜ் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தின் போது, விபத்தை பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய பள்ளி வாகன ஓட்டுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஓட்டுநரின் செயலுக்கு அந்த பள்ளி நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பள்ளி பேருந்து ஓட்டு

நர்களுக்கு மனிதாபிமானம் தொடர்பாக வகுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பள்ளி ஓட்டுநர்களுக்கு உளவியல் ரீதியான சான்று கட்டாயம் என்பதை சட்டமாக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT