வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் கனி (58). இவர், மது போதையில் அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் கனியை சரமாரியாக தாக்கி காட்பாடி காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.