திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசோத்குமார்(19). இவர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலை. விடுதியில் தங்கி வகுப்புக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவர் வகுப்புக்குச் செல்லவில்லை. சக மாணவர் வந்து பார்த்தபோது, பிரசோத்குமார் விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மாணவர் பிரசோத்குமார் வனவியல் படிக்க ஆசைப்பட்டதாகவும், ஆனால் பயோடெக் படிப்பில் சேர்ந்ததால், மனக் குழப்பத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.