க்ரைம்

கோவை | நகை மோசடி தொகையை பயன்படுத்தி ஆன்லைன் ரம்மி விளையாடிய சூப்பர்வைசர்

செய்திப்பிரிவு

கோவை: கோவை சலிவன் வீதியில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்த வீரகேரளத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்(34) என்பவர் ரூ.55 லட்சம் மதிப்பிலான, 1,467 கிராம் தங்க கட்டிகளை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வெரைட்டிஹால் ரோடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, “ஜெகதீஷ் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்துள்ளார். விளையாட்டுக்கு பணம் தட்டுப்பாடு ஏற்பட்டதால், நகைக்கடையின் தங்கத்தை மோசடியாக கணக்கு காட்டி வெளியே விற்கத்தொடங்கினார். அதில் கிடைத்த தொகையை கொண்டு ரம்மி விளையாடி வந்துள்ளார்.

ரூ.55 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை ரூ.37 லட்சத்துக்கு தெரிந்த நபர்களிடம் விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரம்மி விளையாடியுள்ளார். ரம்மியில் குறிப்பிட்ட தொகை அவருக்கு லாபம் கிடைத்து இருந்தாலும், மீண்டும் விளையாடி அந்த தொகையை ரம்மியிலேயே இழந்துள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்” என்றனர்.

SCROLL FOR NEXT