கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பரமானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், ஊத்தங்கரையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதியில் தங்கி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை போலீஸார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர் இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார், விடுதி காப்பாளர், சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.