க்ரைம்

சென்னை | இளைஞரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை செனாய் நகர் வேம்புலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வக் குமார்(28). இவரை கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அமைந்தகரை மாங்காளி அம்மன்கோயில் அருகே சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, சகஆட்டோ ஓட்டுநரான கருணாநிதி(45) கத்தியா் குத்திக் கொலை செய்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற 3-வது கூடுதல் அமர்வில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கருணாநிதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த அமைந்தகரை காவல் நிலைய போலீஸாரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

SCROLL FOR NEXT