திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையைச் சேர்ந்தநபரை, தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த நபர்ஒருவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், என்ஐஏ அதிகாரி எபிசன் பிரோன்கோ தலைமையிலான குழுவினர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதையொட்டி, கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வீட்டில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர் முகமது பைசல் (43) என்றும் இலங்கையின் கொழும்பு நகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தெரிந்தது. மேலும், 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் டெல்லியில் தங்கியிருந்தபோது என்ஐஏ அதிகாரிகள் முகமது பைசல் மீதுவழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், தமிழ்நாட்டுக்கு வந்து கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, மகனுடன் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முகமதுபைசல் மட்டும் தையூர் பகுதிக்கு வந்ததாகத் தெரிகிறது.
மேலும், சமீபத்தில் என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்தவருடன் முகமதுபைசல், செல்போனில் பேசியதாகவும் இதன்மூலம், என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுமுகமது பைசல் இருப்பிடத்தை அறிந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி முகமது பைசலைஅழைத்துச் சென்றனர். இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான ஆதார் அட்டை அவரிடம்இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.