புதுச்சேரி: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் முருகவேல் மகன் செந்தில்குமார் (39). வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
செந்தில்குமாருக்கு ஜெய லட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் கடலூர் பாதிரிகுப்பத்தில் வாடகை வீட்டில் குடியேறினார். கடந்த மாதம் 22-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற செந்தில்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து 23-ம் தேதி புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் கரும்பு தோட்டத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
பாகூர் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், செந்தில் குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகியும் கொலையில் துப்பு கிடைக்காமல் திணறினர்.
இந்நிலையில் செந்தில் குமாரின் நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது. குறிஞ்சிப் பாடியைச் சேர்ந்த கண்ணன் (38), செல்வம் (40) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
செந்தில்குமாரின் நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது.