க்ரைம்

விழுப்புரம் | சின்னசேலம் தனியார் பள்ளி கலவரத்தில் கைதான சிறுவன் ஜாமீனில் விடுவிப்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் நேற்று முன்தினம் வரை 317 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.

இதில், 16 வயது சிறார் ஒருவரை 19 வயது என அறிவித்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான அந்தச் சிறுவனின் தந்தை இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் புகார் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நடுவர் முகம்மது அலி, குறிப்பிட்ட நபர் சிறுவன் என்பதற்கான ஆதாரமாக பிறப்பு சான்று, ஆதார் கார்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ், பள்ளி மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அச்சிறுவனை விழுப்புரத்தில் உள்ள சிறுவர் நீதிக் குழுமத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதன்படி போலீஸார் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் அச்சிறுவனை ஆஜர்படுத்தினர். பின்னர்அவர் விழுப்புரம் சிறுவர்நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப் பட்டார்.

வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நடுவர் சாந்தி (பொறுப்பு) சிறுவனின் எதிர் காலத்தை கருதி பிணையில் விடுவித்தார்.

SCROLL FOR NEXT