புதுச்சேரி: சமூக வலைத்தளத்தில் இழிவான கருத்துக்களை பதிவிட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு 3 மாதசிறை தண்டனை விதிக் கப்பட்டது.
புதுச்சேரி பல்லைக்கழக தமிழ்துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆரோக்கிய நாதன் (76). இவர் கடந்த 2020-ம் ஆண்டு பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 2018ல் அமைக்கப்பட்ட மாவட்ட உள்ளூர் புகார்கள் குழுதலைவராக இருந்த வித்யா ராம்குமார் குறித்து சமூக வலைதளத்தில் இழிவான கருத் துக்களை பதிவிட்டார்.
இது குறித்து வித்யா, புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மோகன் முன்னிலையில் நடைபெற்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஆரோக்கிய நாதனுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக் கப்பட்டது.